சென்னை மாநகராட்சி, நடிகர் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதில், கடந்த ஏப்ரல் – செப்டம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக, மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதன் காரணமாக மண்டபத்துக்கு சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளதாக, ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், மாநகராட்சி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்த பத்து நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன் என உச்சநீதிமன்றநீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார், அதில், “ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என்று தெரிவித்துள்ளார்.
ராகவேந்திரா மண்டப சொத்து வரி…
நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்
— Rajinikanth (@rajinikanth) October 15, 2020