லைக்ஸ் வாங்க மானுடன் புகைப்படம் எடுக்க சென்ற இளம்பெண்..நடந்தது என்ன ??

லண்டனில் உள்ள பிரபல Richmond Park என்னும் மான்கள் பூங்காவிற்கு இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது, அங்குள்ள மான்களைப் பார்த்த அவர், அதனுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டால் அதிகமாக லைக்ஸ் வரும், அந்த புகைப்படமும் பிரபலமாகும் என எண்ணியுள்ளார்.

இதனால், மானின் அருகில் சென்று அந்த பெண் மானுடன் போட்டோ எடுக்க முயன்றுள்ளார். அதுவரை சாதுவாக இருந்த அந்த மான் திடீரென தனது முன்னிரண்டு கால்களாலும் அந்த பெண்ணின் பின் பக்கத்தில் எட்டி உதைத்துள்ளது.

மான் உதைத்ததில் நிலைகுலைந்து அந்த பெண் வேகமாகக் கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் எதேச்சையாக அந்த மான் உதைத்ததை போட்டோ எடுத்து விட்டார்.

தற்போது அந்த புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போலீசார், ”மான்கள் எல்லாம் திரைப்படங்களில் காட்டப்படுவது போல கியூட்டானவை அல்ல.

எனவே தான் மான்களை விட்டு 50 மீட்டாராவது தள்ளி இருங்கள் என அனைவரையும் அறிவுறுத்துகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்கள்.