விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தில் பிரபல இயக்குனர் உள்ளார்?

இளைய தளபதி விஜய் இப்போது தான் அதிக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுப்பது இல்லை. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பலருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்படி அவருடன் எடுத்த புகைப்படத்தை இப்போது பிரபலங்கள் பலர் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல இயக்குனர் இடம்பெற்றுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை மேயாத மான் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் தான். அதன் பிறகு அவர் அமலா பாலை வைத்து இயக்கிய ஆடை திரைப்படம் வைரலாக பேசப்பட்டது.

இப்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.