தமிழ் திரையுலகில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பாடல்கள் மற்றும் மாஸ் வசனங்கள். இதில் ரஜினியின் ஓப்பனிங் பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் கடந்த 2 படங்களில் செம்ம மாஸ் மியூசிக் போட்டவர் அனிருத். ஆம் 2019ல் வெளியான பேட்ட மற்றும் 2020ல் வெளியான தர்பார் என இரு படங்களிலும் பாடல்கள் செம்ம மாஸாக இருந்தது.
நடிகர் ரஜினியின் மனைவி லதா அவர்களின் சகோதரர் நடிகர் ரவி ராகவேந்தரா என்பவரின் மகன் தான் அனிருத். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையில் சிறு வயதில் இசையமைப்பாளர் அனிருத் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.