தலைவலியை விரட்டியடிக்க என்ன செய்யலாம்?..!!

தலைவலி என்பது இயல்பாகவே அதிகளவு பணிசுமையின் காரணமாக அனைவருக்கும் வர கூடியதாகும். இதன் காரணமாக நமக்கு காய்ச்சல்., குமட்டல் மற்றும் பிற உடல் உபாதைகள்., மன உளைச்சல்கள் போன்றவை ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபடுவதற்க்கு எளிய முறைகள் குறித்து காண்போம்.

வெற்றிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து அந்த சாறுடன் இருக்கும் பேஸ்டை நெற்றியில் தடவி வந்தால் உடனடியாக தலைவலியானது நீங்கும். மேலும்., பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் காரணமாக தலைவலியானது எளிதில் நீங்கிவிடும். பசலைக்கீரையையும் நெற்றியில் அரைத்து தடவ வேண்டும்.

துளசி இலைகளை எடுத்துக்கொண்டு நீரில் நன்றாக கொதிக்க வைத்து., தேன் கலந்து குடித்து வந்தால் தலைவலி பிரச்சனையானது உடனடியாக நீங்கும். சாமந்தி செடியின் இலைகளை சாறு எடுத்து சாற்றினை நெற்றியில் தடவினால் தலைவலி பிரச்சனை விரைவில் நீங்கும்.

அதிகளவு தலைவலி இருக்கும் சமயத்தில் ஆப்பிள் துண்டுகளை சிறிதளவு உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி பிரச்சனை உடனடியாக குறையும். உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு மையாக அரைத்து நெற்றியில் தேய்த்தால் தலைவலி நிற்கும்.

இஞ்சியை எடுத்து கொண்டு அதனை சுமார் 10 நிமிடங்கள் நீரில் கொதிக்கவைத்து எலுமிச்சை சாறை பிழிந்து இளஞ்சூடுடன் சேர்த்து சாப்பிட்டால் தலைவலி பிரச்சனையானது விரைவில் நீங்கும். உடலில் நீர் குறையும் நேரத்திலும் தலைவலி ஏற்படலாம்., ஆகையால் சிறிதளவு நீரை குடித்து பார்க்கலாம்.