கமல் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டம்! வெளியான தகவல்!

தமிழகத்தில் வரும் மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு அரசியல் கட்சிகள் சூறாவளியை விட படு பயங்கரமாக பணியாற்றி வருகின்றனர்.

கூட்டணி விவரங்கள், யாருக்கு எந்த தொகுதி, புதிய பொறுப்பாளர்களை நியமனம், கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை இப்படிப் பல்வேறு செயல்பாடுகளையும், முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் என அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக, நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நாம் தமிழர் கட்சி சட்டமன்ற பொது தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி?, தனித்து போட்டியா? என்று இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழி, கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டதாக தெரிகிறது.