கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகை அதிதி பாலன் தமிழில் வெளியான அருவி எனும் படத்தில் சோலோ கதாநாயகியாக நடித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.