கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்ற படம் பிரதி பூவன்கோழி. இப்படத்தில் சோலோ ஹீரோயினாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.
ஓடும் பேருந்தில் தன்னிடம் ஈபிடீஸிங் செய்யும் ரவுடியை தேடிச்சென்று பழிவாங்கும் துணிச்சலான பெண்ணின் கதை தான் இந்த பிரதி பூவன்கோழி.
இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.
மஞ்சு வாரியார் நடித்திருந்த இது கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு நயன்தாராவுடன் பேசு வார்த்தை நடந்து வருகிறதாம்.
ஆனால் நயன்தாரா இப்படத்தில் நடிக்கவில்லை என்றால், நடிகை ஜோதிகாவை இப்படத்தில் நடிக்க வைக்க அடுத்தகட்ட முயற்சியில் படக்குழு ஈடுபடுமாம்.