மீண்டும் இணைந்தது தனுஷ், செல்வராகவன் கூட்டணி

இந்தியளவில் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்று புதுப்பேட்டை. இப்படம் வெளியானபோது பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை.

ஆனால் தற்போது பெரிதளவில் பேசப்படும் படமாக புதுப்பேட்டை மாறிவிட்டது. இப்படத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணி தற்போது வரை கொண்டாடப்படுகிறது.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மயக்கம் என்ன படத்தில் இணைந்திருந்தது. இதன்பின் தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணி எப்போது இணையும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது. ஆம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக படம் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு காதல் கதைக்களம் கொண்ட படம் என்றும் தெரியவந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறது. மேலும் பல வருடங்கள் கழித்து, இவர்கள் இணையும் இந்த கூட்டணிக்கு, யுவன் இசையமைப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லயாம்.

ஆம் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் இப்படத்தில் பா.பாண்டி படத்திற்கு இசையமைத்த, ஷான் ரோல்டன் இசையமைக்க போகிறார்.