” Iam back ” நடிகை லட்சுமி மேனனின் அதிரடி பதிவு..!!

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன்.

இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.

ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை.

சமீபத்தில் விக்ரம் பிரபுவின் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் எனும் செய்தி வெளியாகியது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.