அந்தக் காலத்திலும், இந்த காலத்திலும் அனைவருக்கும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் வடிவேலு தான். அவர் தற்போது புது படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இருந்தபோதிலும், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
இதற்கு காரணம் ரசிகர்கள் இடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் தான். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து ரசிகர்களை தன்பக்கம் இழுக்கும் திறமை கொண்டவர். சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக தயாராகி வருகிறது. அதற்காக தமிழகத்தில் உள்ள பிரபலமானவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அண்ணாமலை, நடிகை குஷ்பு போன்றவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இவளுக்கு முன்னதாக ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பாஜக இணைந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமிதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ் வி சேகர், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்து உள்ளனர்.