வலிமை படத்தில் தற்போது நடித்து வரும் தல அஜித் அடுத்தாக தனது 61வது படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தெரியவந்தது.
இப்படம் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ‘மிஷின் இம்பாசிபிள்’ படத்தை போல், மிகவும் பிரபமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தனது 62 இரண்டாவது படமாக பில்லா, பில்லா 2 போன்ற Gangster கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்க போகிறாராம் தல அஜித் என கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்தி சுப்ராஜ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பே ஜிகுருத்தண்டா, பேட்ட, தற்போது ஜகமே தந்திரம் போன்ற Gangster படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.