நிகழ்ச்சியில் வந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வருங்கால கணவர்..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் சில விஷயங்களை வழக்கமாக செய்வார்கள். அவர்களது தொலைக்காட்சி பிரபலங்களுக்கு நிஜத்தில் திருமணம் கூடினால் அதை அவர்களே கொண்டாடுவார்கள்.

அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்திற்கான திருமண நிகழ்ச்சி கொண்டாட்டம் நடந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ராவிற்கு, ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

விரைவில் அவர்களது திருமணம் நடக்கவுள்ள நிலையில் தொலைக்காட்சி கிராமத்து பொண்ணு என்று ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில் சித்ரா தனது வருங்கால கணவர் பற்றி பேச அவரே திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார்.

அவரை பார்த்து சித்ரா ஷாக்காக பார்க்க பின் இருவருக்கும் நலங்கு வைத்து கொண்டாடியுள்ளனர். இதோ அந்த நிகழ்ச்சியின் புரொமோ,