சமூக வலைத்தளத்தில் மாஸ்ஸாக எண்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் சிம்பு..!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் வெளியானது. 90ML, மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சிம்பு பின் சில காரணங்களால், அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக தன்னை சமூகவலைத்தளங்களில் இணைத்து கொள்ளவுள்ளார். மேலும் இது குறித்து வெளியான தகவலில் Facebook, Instagram, Twitter மற்றும் youtube உள்ளிட்ட சமூகவலைத்தளத்தில் வரும் 22ஆம் தேதி காலை 9.09-ல் இணையவுள்ளார்.