கொழும்பு WTC கட்டிடத் தொகுதியிலும் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு உலவ வர்த்தக மையக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிடம் 42 மாடிகளைக் கொண்டு கொழும்பில் உயர்ந்து விளங்குகின்றது.

மேலும் இதில் பிரபல்யமான ஊடக நிறுவனம், வர்த்தக நிறுவனங்களின் தலைமையகங்கள் என பல நிலையங்கள் உள்ளன.

அந்த வகையில் 32ஆவது மாடியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் ஊழியர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது