நடிகர் விஜய் சேதுபதியின் பிரச்சனைகள் அண்மைகாலமாக அனைவரும் அறிந்ததே. மக்கள் மனதில் மக்கள் செல்வனாக இடம் பிடித்தவர் ஈழத்தமிழர்களை துன்புறுத்தியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் கிரிக்கெட் போட்டியாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
நடிக்க வேண்டாம் என அக்கறையுடன் நலன் விரும்பிகள் கூறிய அறிவுரை ஒருபக்கம் மற்றும் இப்படத்தில் நடிக்க வேண்டுமா என யோசித்து முடிவெடுக்க வேண்டும் என அரசியல் வாதிகள் பக்கம் இருந்து அழுத்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நன்றி வணக்கம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராக தயாராக உள்ளதாம். எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் இந்த தொடரில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளதாம்.
அவர் ஓகே சொல்லிவிட்டால் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கவுள்ளதாம். .
ரமேஷ் வீரப்பனின் வாழ்க்கை கதையை வனயுத்தம் எனவும் ராஜிவ் காந்தி கொலை வழக்கை படம் எடுத்து வெளியிட்டாராம்.
ஈழத்தமிழர்கள் பலர் போரில் உயிர் நீத்தது நாட்டையே உலுக்கிய சம்பவம் எனலாம்.