iPhone 12 கைப்பேசியில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றதா?

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் iPhone 12 கைப்பேசிகளில் 4 மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில் டுவல் சிம் வசதி மற்றும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் அடங்குகின்றன.

இப்படியிருக்கையில் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்டு டுவல் சிம் iPhone 12 தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சிம்களை பயன்படுத்தும்போது அவற்றில் ஒன்றில் மாத்திரமே 5G தொழில்நுட்ப வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Verizon நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Hans Vestberg வெளியிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பொதுவாகவே டுவல் சிம் கைப்பேசிகளில் இவ்வாறான பிரச்சினை காணப்படுகின்றமை வழமையாகும்.

அதாவது இரண்டில் ஒரு சிம் மாத்திரமே புதிய தொலைபேசி வலையமைப்பு தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கம் உடையதாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.