முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HTC தனது புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் HTC Desire 20+ எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 6.5 அங்குல அளவு, 1,600 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 720G mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்களை உடைய 2 கமெராக்கள், 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.
தவிர அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5000 mAh மின்கலமும் காணப்படுகின்றது.
எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 295 டொலர்கள் ஆகும்.