டிக்கிலோனா படத்துக்கு டப்பிங் பேச மறுக்கும் சந்தானம்!

தான் நடித்துள்ள டிக்கிலோனா படத்துக்கு டப்பிங் பேச மறுத்து இழுத்தடிக்கிறாராம் சந்தானம்.

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கிய திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் மிகக் குறுகிய காலத்தில் 8 மில்லியன் பேர் இந்த படத்தின் டீசரை பார்த்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்னர் ’டிக்கிலோனா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மூன்று வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படம் ஒரு டைம் டிராவல் டைம் என்பது ட்ரெய்லரில் இருந்து உறுதியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம் படத்துக்கு டப்பிங் பேச மறுக்கிறாராம். அதற்கான காரணம் ஏற்கனவே அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாக உள்ளன. அதனால் இந்த படத்தையாவது தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பதால் இப்படி ஒரு முடிவை பட வேலைகளை முடிக்க விடாமல் தாமதப்படுத்துகிறாராம் சந்தானம்.