‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது!

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கான மத்திய அரசு விருதின் 2019ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் இரண்டு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திரைப்படத்தில் ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை பார்த்திபன் அமைத்திருந்தார்.

இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என பலரும் பாராட்டியதுடன இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’ தற்போது மத்திய அரசின் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

இதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.