நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்!

விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடிதான்

கடந்த 2015-ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் 5 வருடங்களை நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நானும் ரவுடிதான் ஐந்து வருட கொண்டாட்ட நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

நயன்தாரா நடிப்பில் தான் தயாரிக்க இருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நானும் ரவுடிதான் ரிலீசாகி ஐந்தாவது வருடத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுவது தனக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த படமும் வெற்றி அடைய அனைவரும் வாழ்த்துக்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்