பாகுபலி ஹீரோவுக்கு சர்ப்பிரைஸ் …..’’ராதே ஸ்யாம் ‘’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில்
ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ராஜமௌலி இயக்கத்தில்
நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு அரசிகர்கள் வட்டாரம் விரிந்தது.

அத்துடன் பிரபாஸின் சம்பளமும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாகத்
தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில், வரும் அம்டோபர் 23 ஆம் தேதி பிரபாஸ் தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாட ரெடியாகி வருகிறார்.

இந்நிலையில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில்
பிரபாஸ் தற்போது நடித்துவரும் ராதே ஷ்யாம் படத்தின் தயாரிப்பாளர் வரும் அக்., 23 ஆம் தேதி #BeatsOfRadheShyam என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில்
ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில், 3டி பிக்சர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.