விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்கள்..!!

மாஸ்டர் திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வெளியிட இயலவில்லை. தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் மீட்டிங் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் மற்றொரு மக்கள் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தியின் சுல்தான் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்றும், இப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் மோதும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் ரேஸில் மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார். ஆம் சுசீந்தரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அடுத்த ஆண்டு 2021 பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் 2021 பொங்கலுக்கு விஜய்யுடன் சிம்பு மற்றும் கார்த்தியின் படங்கள் மோதும் என்று தெரிகிறது. இதனடிப்படையில் தியேட்டர்கள் திறந்தாலும் 50% சதவீதம் தான் மக்கள் படத்தை பார்க்க முடியும் மற்றும் இதர விஷயங்கள் இருப்பதினால் மாஸ்டர் படத்தின் வசூல் குறையவும் அதிக வாய்ப்புகள் என்றும் தெரியவந்துள்ளது.