அவ்வை சண்முகி படத்திற்கு முதன் முதலில் கமல் ஹாசன் போட்ட கெட்டப் இதுதான்..

தமிழ் திரையுலகில் புதிதான பல விஷயங்களை அறிமுகப்படுத்தி வைத்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். நடிப்பிலும் பல முறை புதிய விஷயங்களை செய்து அசத்தியுள்ளார்.

அப்படி இவர் செய்து பிரமிக்கவைத்த விஷயம், அவ்வை சண்முகி படத்தில் இவர் போட்ட வயதாக மாமி கெட்டப் தான். ஆம் தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மாமி வேடத்தில் பல தில்லு முல்லுகள் அந்த கெட்டப்பில் செய்யுவார் கமல்.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழில் அவ்வை சண்முகி என்றும் ஹிந்தியில் சாச்சி 420 என்றும் இரு மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் வந்த மாமி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாமி கெட்டப்பிற்காக பெரிதும் கஷ்டப்பட்டனர் படக்குழு.

மேலும் இப்படத்தில் பார்த்த கெட்டப் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கெட்டப் கிடையாதாம். ஆம் கமல் ஹாசன் போட்ட முதல் கெட்டப் இதுதான். இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..