பட்டிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக்கொள் போட்டியாளர்கள்.!

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் பட்டிமன்ற டாஸ்க்கிற்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு தலைப்பில் விவாதிக்கின்றனர்.

மேலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்கின்றனர்.