மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மேக்னாவிற்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தை சிரஞ்சீவியே பிறந்துள்ளதாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் காணப்படுகின்றது.
கன்னட சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அக்காள் மகன் ஆவார்.
இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சினிமாத்துறையையும் உலுக்கியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜுக்கு கணவர் சிரஞ்சீவியின் கட்அவுட் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தற்போது மேக்னாவிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக மறைந்த சிரஞ்சீவியின் சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் ‘Boy Baby’ Jai Hanuman என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், சிரஞ்சீவியே வந்து பிறந்துள்ளதாக குடும்பத்தினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
சமீபத்தில் தான் துருவா சர்ஜா தனது அண்ணியான மேக்னா ராஜ்க்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளித் தொட்டில் ஒன்றை பரிசளித்தார். அந்த தொட்டிலுடன் துருவா சர்ஜா இருந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.