தல அஜித் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெட், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ப்ரியா கில்.
ஹிந்தி மொழி படங்களில் அதிகமாக நடித்து வந்த ப்ரியா கில், பஞ்சாப், போஜ்புரி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்துள்ளார்.
கடைசியாக 2006 ஆம் ஆண்டு பைரவி திரைப்படத்தில் நடித்த ப்ரியா கில், அதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. மேலும் 43 வயதாகும் ப்ரியா கில்லிற்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லையாம். மேலும் படவாய்ப்பில்லாமல் மாடல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..