மாநாடு படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு- சிம்பு பேன்ஸ் செம ஹேப்பி

சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்க ஆரம்பித்தவர். நாயகனாகவும் கலக்க ஆரம்பித்தார், வெற்றி படங்களாக கொடுத்தார்.

இடையில் பிரச்சனைகள் ஏற்பட அவரது படங்கள் வெளியாகவே நிறைய தடைகளை சந்தித்தது.

இப்போது இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி சிம்பு உடல் எடை குறைத்து பழைய எஸ்டிஆராக மாறியுள்ளார்.

அண்மையில் எல்லா சமூக வலைதளத்தில் மீண்டும் கலக்க ஆரம்பித்துள்ளார். அவரை டுவிட்டரில் வரவேற்ற வெங்கட் பிரபு, மாநாடு விரைவில் தொடங்கும் என அப்டேட் விடுத்துள்ளார்.

இந்த மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததில் சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியும் ஒன்று, அது விரைவில் நடக்கப்போகிறது என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.