அஜித் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த பக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்க நினைப்பவர்.
படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் போது அவரை காணலாம், அதை தாண்டி அவ்வளவு எளிதாக அவரை பார்க்க முடியாது.
எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம் தான், அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் கேமராவில் சிக்காமல் இருக்கின்றனர்.
கொரோனா காரணத்தால் எல்லோரும் வீட்டிலேயே முடக்கம், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டில் திறந்து விடுவார்கள் என பேச்சுகள் எழும்ப, அஜித் ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.
அதாவது இந்த ஆண்டே பள்ளிகள் திறந்தாலும் தனது மகள், மகன் இருவரையும் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் இது சரியான முடிவு தான் என பாராட்டி வருகின்றனர்.