கொரோனா வைரஸ் தீவிரம்!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாஹமவில் அமைந்துள்ள வணிக வளாமொன்றில் அமைந்துள்ள மீன் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வணிகவளாகத்தை மூடியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

ஹோமாஹம பிரதேச சபையின் கீழ் உள்ள வணிகவளாகத்திலேயே இந்த நோய்பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள நபர் மஹரகமவை சேர்ந்தவர் பேலியகொட மீன்சந்தைக்கு சென்றவர் என பாலசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நோயாளியையும் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மீன்விற்பனை கடையில் பணிபுரிந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.