நயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் படம் ரூ 1 கோடி 20 லட்சம் வரை விலை போயுள்ளதாக கடந்த செய்திகளில் பார்த்தோம்.

இதற்கிடையில் நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக சுற்றுலா, கோவில்கள் என சென்று வருகிறார். இருவரின் திருமணத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையும் எதிர்பார்த்துள்ளார்கள்.

நானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் மீண்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனை கௌதம் மேனன் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் பாடல் வரிகளை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

இப்பதிவு பலரின் மனதை ஈர்த்துள்ளது.