தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசல், இப்படத்தில் பாவனா, சமீரா ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தல அஜித்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்டுள்ளனர்.
தல அஜித் அவர் நடித்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டது இதுவே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..