சூரரை போற்று ட்ரைலரில் வரும் இந்த காட்சி மெர்சல் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது, மேலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் தற்போது இப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு காட்சி மெர்சல் திரைப்படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என ஒரு சில ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆம் ட்ரைலரில் ரஜினியின் திரைப்படம் போய்க்கொண்டு இருக்கும் போது சூர்யா தியேட்டரில் நுழைவார், அதேபோல் மெர்சல் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் போது விஜய் தியேட்டரில் நுழைவார்.

இதை வைத்து ஒரு சில ரசிகர்கள் இது காப்பி அடிக்கப்பட்ட காட்சி என பதிவிட்டு வருகின்றனர்.