பேஸ்புக் சமூகவலைத்தளமானது பயனர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக Neighborhoods எனும் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியானது தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் அயலவர்களின் போஸ்ட்கள், குழுக்கள் உட்பட அனைத்தையும் ஒன்றிணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை Matt Navarra எனும் சமூகவலைத்தள ஆலோசகர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.
தற்போது பரீட்சார்த்த ரீதியாக சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து பயனர்களும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook is taking on NextDoor with a NEW ‘Neighborhoods’ feature! 🏘🏡
h/t Leon Griggs / https://t.co/oHkIdU6nbC pic.twitter.com/OHYMW1ig9I
— Matt Navarra (@MattNavarra) October 20, 2020