இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாங்களூரை சேர்ந்தவர் ரயன் (26). இவருக்கும் ப்ரியா (26) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இருவருமே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தம்பதி ஒன்றாக பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அப்படி பணிமுடிந்து சில தினங்களுக்கு முன்னர் ரயன் மற்றும் ப்ரியா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த லொறி பைக் மீது மோதியது.
இதில் ரயன் மற்றும் ப்ரியா ஆகிய இருவரும் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ப்ரியா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரயன் உயிரிழந்தார். தங்கள் மண வாழ்க்கையை பல்வேறு கனவுகளோடு தொடங்கிய ரயன் – ப்ரியா ஜோடி இளம்வயதில் உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை பலத்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.