பிரமாண்டமான பெயர் சூட்டு விழா..!!

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறைந்தார் என்பதும் அவர் மரணமடைந்தபோது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தனது கணவரே தனக்குக் குழந்தையாகப் பிறப்பார் என்று மேக்னாராஜ் கூறிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கணவரின் புகைப்படம் அருகே வைத்து தனது கணவரே மீண்டும் பிறந்து உள்ளார் என்று உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னாராஜ் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் மேக்னா ராஜின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த பெயர் சூட்டும் விழாவில் முக்கிய பிரமுகர்களையும் அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்த குழந்தையை ’சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருவதுடன் தங்களுடைய கவலைகளை எல்லாம் மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளோம் என்று மேக்னாராஜ் தந்தை தெரிவித்தார் தெரிவித்துள்ளார்