அடிச்சு தூக்கிய சாதனை!

விஜய்யின் மாஸ்டர் படம் ரசிகர்களின் தற்போதைய நாடித்துடிப்பாக இருக்கிறது. 2021 ல் மாஸ்டர் வருவார். பொங்கலுக்கு மாஸாக களத்தில் இறங்குவார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

விஜய்யின் படங்களுக்கு எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. தமிழ் மட்டுமல்லாது அவருக்கு மற்ற மொழியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹிந்தியிலும் அவரின் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அவ்வகையில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் கலெச்ஷன் செய்த கத்தி படம் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது.

தற்போது Youtube ல் அப்படம் 75 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.