இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இவர் கொழும்பு – 12ஐச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,000 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.