யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் பயண விபரம் இதோ!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணிக்கு NCG AC BUS (Bus No : WP NC 8760) பேருந்தில் பயணித்த மூவருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த பேருந்து 26.10.2020 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

அன்றைய தினம் குறித்த பேருந்தில் பயணித்தோர் சமூக பொறுப்புணர்ந்து உங்கள் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவை உத்தியோகத்தருடன் உடன் தொடர்பு கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.