பிக்பாஸ் ஷிவானிக்கு இந்த பிரபல நடிகரை தான் திருமணம் செய்ய ஆசையாம்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது, இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களினடியே பிரபலமானவர்களில் ஷிவானியும் ஒருவர், ஆரம்பத்தில் அமைதியாக தன்னை காட்டிக்கொண்டிருந்த ஷிவானி.

தற்போது அனைவரிடமும் சிரித்து பேசி வருகிறார், அதுமட்டுமின்றி பாலாஜி முருகதாஸிடம் அவ்வப்போது நெருக்கம் காட்டிவருகிறார்.

இந்நிலையில் ஷிவானியிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் உங்களுக்கு யாரை திருமணம் ஆசை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் “எனக்கு அஜித், விஜய்யை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர்களை திருமணம் செய்ய முடியாது, ஏன்னென்றால் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

மேலும் எனக்கு நடிகர் அதர்வா மிது பயங்கர ஆசை, அவரை கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் ஓகே சொல்வேன்” என கூறியுள்ளார்.