நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிக் டாக் தடை செய்யப்படுமா?

சீன நிறுவனமான பைட் டான்சினால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிக் டாக் அப்பிளிக்கேஷனை தடை செய்வதற்கு அமெரிக்காவில் நீண்ட நாட்களாக இழுபறி நிலவி வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு டிக் டாக்கினை விற்பனை செய்யுமாறு வலியுறுத்தி காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.

காலக்கெடு முடிவடைந்த நிலையில் தடை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது.

இதேபோன்று எதிர்வரும் நொவெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் டிக் டாக்கினை தடை செய்வதற்கு அமெரிக்காவில் உள்ள வர்த்க திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும் இந்த தீர்மானத்திற்கும் பென்சில்வேனியாவிலுள்ள நீதிமன்ற நீதிபதியினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகம் முழுவதும் சுமார் 700 மில்லியன் பயனர்களைக் கொண்ட டிக் டாக் அப்பிளிக்கேஷனுக்கு அமெரிக்காவில் மாத்திரம் 100 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

இவர்களில் 50 மில்லியன் வரையானவர்கள் நாள்தோறும் டிக் டாக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.