தீபாவளியை முன்னிட்டு அதிரடி விலைக் கழிவில் iPhone XR

அமேஷானைப் போன்று இந்தியாவில் ஒன்லைன் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமாக Flipkart விளங்குகின்றது.

இத் தளத்தில் வரவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விலைக்கழிவுகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த iPhone XR கைப்பேசியினை விலைக்கழிவில் விற்பனை செய்கின்றது.

இதன்படி 64GB சேமிப்பு நினைவகம் உடைய கைப்பேசியின் விலை இந்திய மதிப்பில் 39,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேபோன்று 128GB சேமிப்பு நினைவக்தினைக் கொண்ட iPhone XR கைப்பேசியானது 43,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தவிர தவணைக் கட்டண முறையில் குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்யும் வசதியினையும் அந்நிறுவனம் வழங்குகின்றது.

இதன்படி தவணைக்கட்டணமானது 3,334 ரூபாய்களிலிருந்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.