ரஷ்யாவில் கர்ப்பமாகி ரகசியமாக குழந்தை பெற்ற 14 வயது சிறுமி குழந்தையை Freezerல் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Anastasia என்ற 14 வயது சிறுமி தனது 16 வயது முன்னாள் காதலனால் கர்ப்பமாகியுள்ளார்.
இதை குடும்பத்தாரிடம் இருந்து மறைத்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் ரகசியமாக குழந்தை பெற்றுள்ளார்.
பின்னர் குழந்தையை மறைக்க வீட்டு Freezerல் வைத்துள்ளார், இதை தொடர்ந்து குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சூழலில் இரவு முழுவதும் அதிக இரத்த போக்கு ஏற்பட்ட நிலையில் Anastasia அழுது கொண்டே இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தாயார் மகளுக்கு குடல் அழற்சி பிரச்சினை ஏற்பட்டதாக நினைத்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது வழியில் மருத்துவரிடம், தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை கூறி அதிர வைத்திருக்கிறார் Anastasia.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Anastasiaவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையில் தனது மகள் Anastasia உடல் எடை சிறிது காலமாக கூடியதாகவும், அவர் கர்ப்பமாகவில்லை எனவும் அவரின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.