தமிழில் மட்டுமல்ல இந்திய திரையுலகையே புரட்டிப்போட்ட ஒரு மாபெரும் சகாப்தம், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மரணமடைந்தார். எஸ்.பி.பியின் உடல் அவரின் சொந்த பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி அவர்களை பற்றி அவரின் மரணத்திற்கு பிறகு பல விஷயங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.
” எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் மிகவும் சரியில்லாத போது தனக்கு மிகவும் பிடித்த ‘ மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ ‘ என்ற புகழ் பெற்ற பாடலை ஆறுதலுக்காக பாடுவாராம் “.
” அப்படி மரணத்தின் விளிம்பில் இருந்தபோது மருத்துவர்களிடம் இந்த பாடலை நான் பாடிக்கொள்ளவா என எஸ்.பி.பி. கேட்டுள்ளாராம். அதற்கு மருத்துவர்கள் அனைவரும் கண்கலங்கி அழுத்ததாக ” இசையமைப்பாளர் கோட்டி கூறியுள்ளார்.