காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள். ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் பெறாவிட்டாலும் சமமான முக்கியத்துவம் அவர்களுக்கு படத்தில் உண்டு.
நகைச்சுவை காட்சிகளுக்காகவே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமிடங்களிலும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் மனதில் மறக்க முடியாத இடம் பிடித்துள்ளார்கள்.
அதில் ஒருவர் நடிகர் மார்த்தாண்டன். பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதா ரவி நடித்த சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என கூறிக்கொண்டு பைத்தியக்காரர் போல் வருவதை பார்த்திருப்பீர்கள் தானே. அது அவர் தான்.
சில படங்களில் அவர் வில்லன், மந்திரவாதி போலவும் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக அவரை திரையில் காணமுடிவதில்லை.
அண்மையில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேந்திரன்அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட அதில் இருப்பது மார்த்தாண்டன் தான் என ரசிகர்கள் வியந்துள்ளனர்.
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம் மார்த்தாண்டன் சார்.