தனது அடுத்தப்படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிகர் சூர்யா, வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்களால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர்.

இவர் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 12 தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

மேலும் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் டி.ஜெ. கனகவேல் இயக்கத்தில் சூர்யா 39 அல்லது நவரச என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள நடிகர் சூர்யாவின் புதிய கெட்டப்பை வைத்து பார்க்கும் போது, நவரச என்ற வெப் சீரிஸ் ஒன்றிற்காக தான் இந்த கெட்டப் என தெரியவந்துள்ளது.