பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அமீர் கான். அவரின் படங்கள் வெளிவந்தால் ஒரே வசூல் வேட்டை தான். அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவர்.
அவர் கடந்த 1986 ல் ரீனா தத்தாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜூனைத், ஐரா என இருமகள்கள் இருக்கிறார்கள். பின் ரீனா மற்றும் ஆமிர் இருவர் பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் 2005 ல் கிரண் ராவை ஆமிர் கான் திருமண செய்ய இவர்களுக்கு மகன் பிறந்தான்.
தற்போது அமீர் கானின் மகள் ஐரா நான் 14 வயதிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்த நபர் தெரிந்து தான் அதை செய்தாரா என எனக்கு அப்போது தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. நடந்தது என்ன என புரிந்து கொள்ள ஒருவருடம் ஆனது. அச்சூழலில் இருந்து என்னை என் பெற்றோர்கள் மிட்டனர். அதிலிருந்து வெளிவந்த நான் மோசமாக உணரவில்லை, பயமும் இல்லை, முடிந்துவிட்டது என கடந்து வந்துவிட்டேன், இதை பற்றி யாரிடமும் பேசவில்லை.
என் சிறு வயதில் பெற்றோர் விவாகரத்து செய்தனர். நான் அதிர்ச்சியாகவில்லை. சுமூகமான முறையில் விவாகரத்தானாலும் இன்னும் நண்பர்களாக உள்ளார்கள். குடும்பம் உடையவில்லை என கூறியுள்ளார்.