பிக்பாஸ் வீட்டில் முதலில் எல்லோருக்கும் பிடித்தவராக இருந்தவர் பாலாஜி முருகதாஸ். கடுமையான போட்டியாளராக இருப்பார், டைட்டிலை இவர் தான் ஜெயிப்பார் என பலர் கூறினர்.
ஆனால் போக போக பாலாஜி செய்யும் சில காரியங்களால் அவர் மீது வெறுப்பில் உள்ளார்கள் மக்கள் என்றே கூறலாம். நிகழ்ச்சியில் பொய் கூறியுள்ளார், அவர் தான் தலைமை என்பது போல் நடந்து கொள்கிறார் என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை சரண்யா, பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் பாலாஜியை Red Card கொடுத்து வெளியே அனுப்புங்கள் என கோபமாக கூறியுள்ளார்.
அவர் கூறியதற்கு ரசிகர்கள் பலரும் இதையே கூறி வருகின்றனர்.