நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார், இவரை அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.
அந்த வகையில் நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் நயன்தாரா, மேலும் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வந்தார்.
மேலும் கடைசியாக ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது நிழல் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருடன் பிரபல நடிகரான குஞ்சாகோ பூபன் நடிக்கின்றார்.
மேலும் நிழல் படப்பிடிப்பின் பொது நடிகை நயன்தாரா மற்றும் குஞ்சாகோ பூபன் இருவரும் கொச்சி கடற்கரையில் காணப்பட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.