நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன், இப்படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனராக தமிழ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவு பெற்று மிக பெரிய வெற்றியை பெற்றது.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான முதல் படம் பொல்லாதவன், இப்படத்திற்கும் பின் இவர்கள் கூட்டணியில் வெளியான ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் தான்.
மேலும் அப்போது பொல்லாதவன் திரைப்படத்துடன் சூர்யாவின் வேல் மற்றும் விஜய்யின் அழகிய தமிழ் மகன் என இரண்டு திரைப்படங்களும் வெளியானது. ஆனால் பொல்லாதவன் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் நடிகர் தனுஷ் உடன் ஜெயம் ரவி, நடிகர் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆம் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..